பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது இருந்து வரும் அலுவலகத்தின் மின்சார பாக்கி செலுத்தப்படாததால், இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் பிரதமர் அலுவலகத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சார கட்டண பாக்கியை வைத்துள்ளதாகவும். கடந்த மாதமே கட்ட வேண்டிய ரூ.35 லட்சம் கட்டணத்தையும் செலுத்தவில்லை. தற்போது லட்சக்கணக்கில் மின்கட்டணம் நிலுவையில் இருக்கிறது.
மின்சார கட்டண குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு பல முறை தகவல் அனுப்பப்பட்ட்தாகவும். ஆனால், இதுவரை பதில் ஏதும் வெளிவரவில்லை. தொடர்ந்து 2 மாதங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பை துண்டிக்கலாம் எனும் சட்டம் அமலில் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை விரைவில் செலுத்தவில்லை என்றால் பிரதமர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இஸ்லாமாபாத் மின்விநியோக வாரியம் தெரிவித்துள்ளது.






