தென் அமெரிக்க – கொலம்பியாவில் சவப்பெட்டிக்குள் போதைப்பொருட்களை கடத்தி சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென் அமெரிக்க – கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு போதைப்பொருட்கள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் தீவிர வாகன சோதனைகளையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அங்குள்ள சான்டான்டர் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக சென்ற ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.
குறித்த காரில் 2 சவப்பெட்டிகள் இருப்பதைக் கண்டனர். ஆனாலும் அந்த சவப்பெட்டிகளை அவர்கள் கொஞ்சமும் தயக்கமின்றி இறக்கி திறந்து பார்த்த போது உயிரிழந்தவர்களின் உடல்கள் இல்லை.
அதற்கு மாறாக 300 கிலோ கஞ்சா சிறுசிறு பக்கற்றுக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். அவற்றை பறிமுதல் செய்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.