பயங்கரவாத தாக்குதலின் மனித வெடிகுண்டாக செயல்பட்ட இஸ்லாமிய தீவிரவாதியின் உடல் மட்டக்களப்பு கள்ளியங்காட்டு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருதயபுரம் கிழக்கு கிராம சேவகர், சுகாதார பரிசேதகர் மற்றும் பொலிசார் முன்னிலையில் நேற்றையதினம் குறித்த தீவிரவாதியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது .
இந்நிலையில் கள்ளியங்காட்டு இந்துமயானம், மாநகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மாநகர சபையின் அனுமதியில்லாமல் PHI எவ்வாறு குறித்த இடத்துக்கு போனார், ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதோடு இதற்கான முழுப்பொறுப்பையும் மாநகர சபையையே ஏற்கவேண்டும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை காத்தான்குடி பள்ளிவாசல் நிர்வாகம், குறித்த இஸ்லாமிய தீவிரவாதியின் உடலை பொறுப்பேற்க முடியாதென சட்டம் கொண்டுவந்துள்ளார்கள்.
இந்த நிலையில் மட்டு மாநகர சபையோ திரை மறைவில் முஸ்லிம் தீவிரவாதியின் உடலை இந்து மயானத்தில் அடக்கம் செய்துள்ளமை விமர்சனக்களை தோற்றுவித்துள்ளது.
இதேவேளை இன்று மாலை 4:00 மணிக்கு தீவிரவாதியின் உடலை இந்துமயானத்தில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கள்ளியங்காடு மயானத்தின் முன் ஒன்று திரளுமாறு அப்பகுதி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மனித வெடிகுண்டான குறித்த முஸ்லிம் தீவிரவாதியின் உடலை உடனடியாக மாநகர சபை அப்புறப்படுத்தி, காத்தான் குடியில் புதைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையேல் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவருமெனவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






