அமெரிக்கா அதிரடி நடவடிக்கை., அடிபணிந்த சீனா!!

சீன நாட்டின் வர்த்தக நடைமுறைகளின் மீது அமெரிக்காவானது தொடர்ந்து குற்றசாட்டுகளை கூறி., சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் மீது அதிகளவு வரியை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த அதிரடி உத்தரவிற்கு பின்னர் சீன வர்த்தகம் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில்., சீனாவும் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில நடவடிக்கையில் ஈடுபட துவங்கியது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களின் மீது அதிகளவு வரி விதித்து உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே வர்த்தக போரானது தீவிரமடைந்ததை அடுத்து., சீனாவின் கரன்சியான யுவானின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில்., வருகிற செம்பம்பர் மாதம் 1 ஆம் தேதி முதலாகவே மீண்டும் சீன பொருட்களின் மீது புதிய வரிகளை விதிக்க உள்ளதாகவும் அமெரிக்க அறிவித்துள்ளதால்., சீன வர்த்தகத்தில் கடுமையான எதிரொலியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்., கரன்சியும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆசிய பங்கு சந்தையில் இன்றைய நாளின் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இருந்த சீனாவின் யென் கரன்சி மதிப்பு மேலும் சரிய துவங்கியது. இந்த வர்த்தக போர் சரிவானது கடந்த 2008 ஆம் வருடத்திற்கு பிறகு அதிகபட்ச வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில் ‘ஸ்மார்ட் சீனா’ சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய சீனா துணை பிரதமர் லியூ ஹீ, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக கூறினார்.

இது குறித்து பேசியதாவது, “புதிய தொழில்நுட்ப துறையில் வர்த்தக பாதுகாப்புவாதத்தையும், முற்றுகையையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. உற்பத்திச் சங்கிலிகளின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த சீனா அதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அமெரிக்கா உடனான வர்த்தகப்போர் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு மூலம் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் தற்போது நடைபெற்று வரும் வர்த்தகப் போரின் விரிவாக்கத்தை இதற்குமேலும் ஏற்கமுடியாது. அதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என தெரிவித்தார்.