மனைவியை மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற கணவன்..!

ஒடிசா மாநிலத்தில் கட்டிய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து வந்த உறவினர்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்திலுள்ள சனாகலியா படா என்ற பகுதியில் தான் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவர், தனது சொந்தக்கார இளைஞருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இருவரும் ஒன்றாக வெளியே சென்று சுற்றிவிட்டு உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

இந்த விடயம் குறித்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்த நிலையில், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து குறித்த பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றி மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அப்பெண்ணின் சகோதரர் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கவே, அவர்கள் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து இதுதொடர்பாக, 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.