கள்ளக்காதலியை கொன்று புதைத்து……கணவனுக்கு வாட்ஸப்பில் மெசேஜ் செய்த கொடூரன்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியை அடுத்துள்ள பொன்னைப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் பெருமாள். இவரது மனைவியின் பெயர் பாண்டிச்செல்வி. பெருமாள் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில்., இவர்களின் மகன் மற்றும் மகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்., பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ரெங்கையா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரெங்கையா மாற்றுதிறனாளியாக இருக்கும் நிலையில்., இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இந்த பழக்கத்தை அடுத்து பாண்டிச்செல்வியின் இல்லத்திற்கு ரெங்கையா வந்து செல்லும் வழக்கத்தை வைத்துள்ளான். இவ்வாறாக இவர்கள் இருவருக்கும் மலர்ந்த கள்ளக்காதலை., வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசத்துடன் இருந்து வந்துள்ளனர்.

இந்த சமயத்தில்., கடந்த 22 ஆம் தேதியன்று அந்த பகுதியில் நடைபெற்று வந்த 100 நாள் வேலைக்கு செல்வதாக கூறி., ரெங்கையாவின் இல்லத்திற்கு பாண்டிச்செல்வி சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து இவரை தேடி அலைந்த உறவினர்கள் மற்றும் பாண்டிச்செல்வியின் தந்தை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., சிங்கப்பூரில் பணியாற்றி வந்த பெருமாளின் வாட்சப் எண்ணிற்கு அவரது மனைவியை கொலை செய்து புதைத்து விட்டதாகவும்., தம்மை மன்னிக்க வேண்டும் என்ற தகவலும் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுத பெருமாள்., இந்த தகவலை தனது மாமனாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரெங்கையாவை கைது செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., பாண்டிசெல்விக்கும் – எனக்கும் இருந்த கள்ளகாதலின் அடிப்படையில் இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்தோம். இந்த நிலையில்., எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக கண்மாய் பகுதிக்கு பாண்டிசெல்வியை அழைத்து சென்று கொலை செய்து புதைத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த காவல் துறையினர் பாண்டிச்செல்வி புதைக்கப்பட்ட இடத்திற்கு ரெங்கையாவை அழைத்து சென்று உடலை தோண்டி எடுத்தனர். பாண்டிச்செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில்., ரெங்கையாவிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., இந்த கொலைக்கு உடந்தையாக யாரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.