கர்ப்பமடைந்ததை மறைத்த ராணி! என்ன காரணம்?

பிரித்தானிய ராணி தான் கர்ப்பமாக இருந்த சமயத்தில், வெளியுலகுக்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக மறைத்து வைத்திருந்துள்ளார்.

இளவரசிகள் கேட் மட்டும் மேகன் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் அதிகமான புகைப்படங்கள் வெளியாகின. கர்ப்பிணியாக இருக்கும் போதே அவர்கள் பல அரச பணிகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் பிரித்தானியாவின் ராணி கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லையாம். காரணம் என்னவென்றால் ராணி கர்ப்பமாக இருப்பதை மறைப்பதில் அரசர் அதிக எச்சரிக்கையுடன் இருந்துள்ளார்.

1948 ஆம் ஆண்டில் அப்போதைய இளவரசி எலிசபெத் கர்ப்பமாக இருந்தபோது, பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு ரகசிய அறிக்கையை வெளியிட்டது. அதில், “இளவரசி எலிசபெத் ஜூன் இறுதிக்குப் பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார்.” என குறிப்பிட்டிருந்தது.

அவர் கடைசியாக தோன்றிய பொது நிகழ்விற்கு பிறகு 5 மாதம் கழித்து இளவரசர் சார்லஸ் நவம்பர் 14ம் திகதி அன்று பிறந்தார். அந்த நேரத்தில் 22 வயதாக இருந்த ராணி, பக்கிங்ஹாம் அரண்மனையில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.

பக்கிங்ஹாம் அரண்மனை புனரமைக்கப்படும்போது, இளவரசி அன்னே 1950 இல் கிளாரன்ஸ் ஹவுஸில் பிறந்தார். இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் முறையே 1960 மற்றும் 1964 ஆம் ஆண்டுகளில் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிறந்தனர்.

மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த அரச குடும்பத்தின் முதல் உறுப்பினர் இளவரசி டயானா என்பது குறிப்பிடத்தக்கது.