81 பேருக்கு மறுஉயிர் தந்து… உலகிற்கு பிரியா விடையளித்த 10 வயது சிறுமி!

அமெரிக்காவில் 10 வயது சிறுமிக்கு தாய் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இறுதி மரியாதை செய்த இதயத்தை உருக வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

ஆகத்து 7ம் திகதி கலிபோர்னியாவின் Tulare County பகுதியில் ஐஸ்கிரீம் வாங்க சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கி 10 வயதான பிரான்சின் சலாசர் படுகாயமடைந்தார்.

சம்பவத்தன்று, பள்ளியில் இருந்து சிறுமியை அழைத்து சென்ற அவரின் தாய் Hanah குழந்தைக்கு ஜஸ்கிரீம் வாங்கிகொடுத்து இன்ப அதிர்ச்சிக் கொடுக்க விரும்பியுள்ளார். இந்நிலையைில், பிரான்சின் சலாசர் ஜஸ்கிரீம் வாங்க சென்றபோது கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த சிறுமி Valley குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு பிரான்சின் சலாசருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாகவும், ஆகஸ்ட் 10ம் திகதி அன்று இறந்துவிட்டார் என்றும் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். Valley குழந்தைகள் மருத்துவமனையின் ஊழியர்கள் முதன் முறையாக பள்ளி மாணவிக்கு இறுதி மரியாதை செய்துள்ளனர்.

சிறுமியை நினைவுகூரும் வகையில், சிறுமி அறுவை சிகிச்சை அறைக்கு உள்ளே செல்லும்போது ஊழியர்கள் கண்ணீருடன் நடைபாதையில் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர்.

சிறுமியின் உடலுறுப்பு தானத்தால் ஆறு உயிர்கள் காப்பாற்றப்படும், மேலும் 75 பேருக்கு உதவுவதாகவும் உடலுறுப்பு தான அமைப்பு கூறியுள்ளது.

என் மகள் ஒரு அக்கறையுள்ள, அன்பான, தன்னலமற்ற நபர், அவள் தனக்கு முன்பாக அனைவருக்கும் உதவுவாள் என மறைந்த சிறுமியின் தாய் Hanah கூறியுள்ளார்.