சுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் 20 பேருடன் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்!

எய்ட்ஸ் மற்றும் பிற பால்வினை நோய்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அரசாங்கம் ஸ்பான்சர் செய்த ஆய்வு ஒன்று, சுவிஸ் மக்களைக் குறித்த அதிர்ச்சிக்குரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

29,350 பேர் பங்கேற்ற அந்த ஆய்வின் முடிவுகள், சுவிஸ் மக்களில் சுமார் 20 சதவிகிதத்தினர், 20க்கும் அதிகமானோருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளன.

சுமார் 40 சதவிகிதத்தினருக்கு 10க்கும் மேற்பட்ட துணைவர்கள் இருக்க, வெறும் 13 சதவிகிதத்தினர் மட்டுமே ஒரே துணையுடன் வாழ்கின்றனர்.

சுவிட்சர்லாந்தில், ஒரு பெண், தன் வாழ்நாளில் ஆறு பேருடன் பாலுறவு வைத்துக் கொள்வதாகவும், அதேபோல், ஒரு ஆண், சராசரியாக ஏழு பெண்களுடன் பாலுறவு கொள்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நீண்ட நாள் ஒரே துணையுடன் வாழ்பவர்கள் கூட, தங்கள் துணைக்கு துரோகம் செய்வதாக, அவர்களில் 27 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதில் துரோகம் செய்யும் ஆண்கள் 31 சதவிகிதம், பெண்கள் 24 சதவிகிதம். அந்த ஆய்வை மேற்கொண்ட இணையதளம், 2015இல் சுவிட்சர்லாந்தில் 500 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருந்ததாகவும், அந்த எண்ணிக்கை மாறாமல் அப்படியே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், சிபிலிஸ் போன்ற பிற பால்வினை நோய்கள், ஓரினச்சேர்க்கை ஆண்களிடம் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கிளமைடியா என்னும் நோய் பெண்களிடையே 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், அதிகபட்சமாக கொனோரியா என்னும் நோய் உச்சபட்சமாக இருந்ததாகவும், 2001க்கும் 2015க்கும் இடையில், அந்த நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து, 1,800ஐத் தாண்டியதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.