கோவை அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு.!

தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் கோயம்புத்தூர் மத்திய சிறையினில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை வளாகத்தில் இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று ஒரு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கு சென்று தினசரி 3 அரசு மருத்துவர்கள் கைதிகளுக்கு ஏற்படும் உடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பர். அங்குள்ளோர்க்கு மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் இருக்கும் சிறைக் கைதிகள் வார்டுக்கு அனுப்பப்படுவர்.

கோவை அரசு மருத்துவமனையில் இருக்கும் சிறைக்கைதிகள் வார்டில், சுமார் 10 கைதிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். ஆனால் தற்போது அங்கு 8 கைதிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் அந்த அரசு மருத்துவமனையில் இருக்கும் சிறை கைதிகள் பலர் மருத்துவர்கள் சரியாக வருவதில்லை. எங்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய இரவில் உணவு இவர்களுக்கு வழங்கப்பட்ட போதிலும், சாப்பிட மறுத்துள்ளனர். இதன் காரணமாக அங்கே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.