முதல்வர், காவல்துறை வரை சென்ற மதுமிதா தற்கொலை விவகாரம்!!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என முதல் சீசனில் ஓவியா பல விஷயங்கள் செய்தார் குறிப்பாக குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, இதற்கு பின்னர் ஓவியா பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இது போலவே 3வது சீசனில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற மதுமிதா கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார், இது பரபரப்பாக பேசப்பட்டது.

நான் ஏன் அப்படி செய்தேன் என முதன்முறையாக மதுமிதா பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தைரியமான பெண், என் தைரியம் எந்த அளவிற்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவுக்கு வந்திருப்பேன். நான் என் கருத்தை பிக்பாஸ் வீட்டில் வெளிப்படுத்தினேன், என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள் என்றார்கள் அங்கிருந்தவர்கள். கடைசியில் யார் முட்டாள் என தெரியப்படுத்த வேண்டும் என்று தான் இப்படி செய்தேன் என அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து பதிவிட்டுள்ளார், அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டு பிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 காமிராவுல சில வேலை செய்ய வில்லையா? இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் தமிழக காவல்துறைத் தலைவரையும், தமிழக முதல்வர் அலுவலகத்தையும் டேக் செய்துள்ளார்.

எஸ்.வி.சேகரின் பதிவுக்கு பதில் கமெண்ட் வெளியிட்டுள்ளவர்கள், மது விவகாரத்தில் நீதி தேவை என வலியுறுத்தி, சென்னை மாநகர்ப் போலீசையும் சேர்த்து டேக் செய்துள்ளனர்.