ஆவிகள் உதவியால் காணாமல் போன சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாள்: உண்மையா?

மலேசிய காட்டில் காணாமல் போன பிரித்தானிய சிறுமியை தங்களால் கண்டுபிடிக்க முடியாததால் மலேசிய பொலிசார் ஆவிகளின் உதவியை நாடியதாகவும், அதற்கு அடுத்த நாள்தான் அவளது உடல் கிடைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய சிறுமி நோரா மலேசிய காட்டுப்பகுதியில் காணாமல் போன நிலையில், தங்களால் எதுவும் செய்ய முடியாத நிலைமையை உணர்ந்த மலேசிய பொலிசார், ஆவிகளுடன் பேசும் நான்கு பேரின் உதவியை நடியுள்ளார்கள்.

ஏற்கனவே பொலிசார் மந்திரவாதி ஒருவரின் உதவியை நாடியது அனைவரும் அறிந்ததே.

தற்போது அவர்கள் ஆவிகளுடன் பேசும் நால்வரை சந்தித்து உதவி கோரியதாகவும், அந்த சந்திப்பின்போது நோராவின் பெற்றோர்களையும் தங்களுடன் இருக்க வற்புறுத்தியதாகவும், பொலிசாரின் வற்புறுத்தலின்பேரில் அந்த கூட்டத்திற்கு சென்ற நோராவின் பெற்றோர் ஒரு மணி நேரத்திற்குப்பின் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த கூட்டத்தின்போது நோராவை அவளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஆவிகள் சம்மதித்ததாக ஆவிகளுடன் பேசுவோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அந்த கூட்டம் திங்களன்று மாலை நடைபெற்றதாகவும், செவ்வாயன்றே நோராவின் உடல் கிடைத்துவிட்டது என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிலர் கடவுளின் உதவியால்தான் நோராவின் உடல் கிடைத்தென்று நம்ப, மற்றவர்கள் அது தற்செயலாக நடந்தது என்று நம்புகிறார்கள்.

இதற்கிடையில் நோரா காணாமல் போனது மற்றும் நிர்வாணமாக கண்டு பிடிக்கப்பட்டது போன்றவை தொடர்பான கேள்விகளுக்கு மலேசிய பொலிசாரிடம் சரியான பதில் இல்லாததால், அவர்கள் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.