முஸ்லிம் பெண்ணிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது!

கல்முனையில் கணவன் கொலை வழக்கில் அவரின் மனைவியான கலந்துர் ரூபியா என்ற முஸ்லிம்பெண்மணிக்கு எதிராக 2012ஆம் ஆண்டு சட்டமா அதிபரினால் கல்முனை மேல் நீதிமன்றில் கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு அன்றைய மேல் நீதிமன்ற நீதிமன்ற மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

நீதிபதி இளஞ்செழியன் யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்தும் கல்முனையில் குறித்த வழக்கினை விசாரணை செய்யும் விசேட நீதிபதியாக கல்முனைக்கு நியமிக்கப்பட்டார்.

கணவனை கத்தியால் குத்தி கொலை செய்தமை மற்றும் கயிற்றை கழுத்தில் இட்டு தூக்கிட்டு கொலை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் குற்றவாளி மேன்முறையீடு செய்தார்.

மேன்முறையீட்டு நீதி மன்றும் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு சரியானது என உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்ற இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.