இந்தியன்-2 படத்தில் இணையும் நடிகர்???

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ஆர்ஜே.பாலாஜி, நெடுமுடிவேணு, டெல்லி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. தற்போது சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணையவுள்ளார்.

‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இருவருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மறுபடியும் ‌ஷங்கர் கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன்- 2 திரைப்படத்தில் அதிக அளவிலான நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 12-ந்தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சமுத்திரகனிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.