மூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண்!

தமிழகத்தில் இளம் பெண்ணை வெட்டிக் கொன்ற இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சுமதி (24).

பழனிச்சாமி சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சுமதியை அவருடைய பெற்றோர் மணிகண்டன் என்பவருக்கு 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்நிலையில் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதால் அவருடன் சண்டை போட்ட சுமதி கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் சுமதி அதே பகுதியை சேர்ந்த திருமலைச்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் திருமலைச்சாமியும், இவருடைய உறவினர் கணேஷ் (24) என்பவரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த சூழலில் கணேசுக்கும், சுமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் சுமதியின் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் தொடர்பை விட்டுவிடும் படி சுமதியிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்பின்னர் கணேசுடன் சுமதி பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திருமலைச்சாமி வேலைக்கு சென்ற பின்னர் சுமதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த கணேசிடம் சுமதி பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் அரிவாளால் சுமதியின் கழுத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.

சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சுமதி சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து திருமலைச்சாமி மற்றும் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த திருமலைச்சாமி மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதே சமயம் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சுமதியின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் தலைமறைவாக இருந்த கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.