இதையெல்லாம் கோவிலில் செய்தால் உங்களுக்கு பாவம் வந்து சேரும் தெரியுமா?

கடவுளை வழிபடுவதால் மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். கோவிலில் கடவுளை வழிபாடு செய்யும்போது அதை சரியாக புரிந்துக்கொண்டு வழிபாடு செய்தால் கடவுளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

* கோவிலில் தூங்கக்கூடாது.

* தலையில் தொப்பி, துணி அணியக்கூடாது.

* கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக்கூடாது.

* விளக்கு இல்லாமல் அல்லது விளக்கு அணைந்திருக்கும் பொழுது வணங்கக்கூடாது.

* அபிஷேகம் நடக்கும்போது கோவிலை சுற்றி வரக்கூடாது.

* குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது.

* கோவிலில் நந்தி மற்றும் மூர்த்திகளையும் தொடக்கூடாது.

* கையில் விளக்கு ஏந்தி ஆராதனை செய்யக்கூடாது.

* மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.

* கோவிலுக்குச் சென்று திரும்பியவுடன் கால்களை கழுவக்கூடாது.

* சிவன் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் அமரக்கூடாது.

* மண் விளக்கை ஏற்றும் முன் அவற்றை சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.

* கிரகணம் இருக்கும்போது கோவிலை வணங்கக்கூடாது.

* புண்ணிய தீர்த்தங்களில் முதலில் நீரை தலையில் தெளித்துக்கொண்டு பின் கால் அழும்ப வேண்டும்.

* கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.