பிரபல ரஜினி பட நடிகை காலமானார்!

பழம்பெரும் இந்தி நடிகை வித்யா சின்ஹா, தனது 18 வயதில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். தற்போது வித்யா சின்ஹா (வயது 71). ஆரம்பத்தில் மாடலாக இருந்தவர் பின்னர், நடிகையாக உருவெடுத்தார். 1974-ல் வெளியான பாசு சாட்டர்ஜியின் ‘ரஜினிகாந்தா’ படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்தியில் முன்னணி நடிகையாக இருந்த வித்யா சின்ஹா, 1986-ஆம் ஆண்டு ஜீவா என்ற இந்தி படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து நடிக்கவில்லை. மீண்டும் கடந்த 2011-ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘பாடி கார்டு’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார் வித்யா சின்ஹா.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று அவரது உடல்நிலை மோசமானது, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று சிகிச்சை பலனின்றி வித்யா சின்ஹா காலமானார்.