திருச்சி சமயபுரத்தில் இருக்கும் தங்கும் விடுதிகளில் விபசாரம் நடந்து வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக லால்குடி துணை காவல் சூப்பிரண்டு ராஜசேகர் அவர்கள் மேற்பார்வையில் சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் காவல் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது அந்த விடுதிகளில் 2 பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்டதாக கூறி விடுதியின் காவலாளிகள் கருப்பையா (62), தங்கராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், உடந்தையாக இருந்ததாக கூறி விடுதி மேலாளர்கள் பொன்னையா (62), ரபீக் அகமது (43) என்ற இருவரையும் அவர்களுடன் போலீசார் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த 4 பெண்களையும் போலீசார் மீட்டனர்.
இதன் காரணாமாக கைது செய்பப்பட்ட அனைவரையும் திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அதன் பின் மீட்கப்பட்ட பெண்கள் நாலாவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மீதமுள்ள குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.