லண்டனில் காப்பாற்றுங்கள்… உதவுங்கள் என்று கெஞ்சிய இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை…

பிரித்தானியாவில் மூன்று பேர் கொண்ட குழுவினரால் துரத்தப்பட்ட இளைஞன் கொல்லப்பட்ட நிலையில், அந்த இளைஞன் தன்னை காப்பாற்றுங்கள், உதவுங்கள் என்று கத்திய படி ஓடியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

தலைநகர் லண்டனின் Camden பகுதியில் இருக்கும் Munster Square-ல் கடந்த திங்கட் கிழமை இரவு நேரத்தில் மூன்று பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் Alex Smith என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் அன்று இரவு 11 மணிக்கு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

இந்த சம்பவத்தைக் கண்ட பெயர் தெரிவிக்க விரும்பாத பெண் ஒருவர், நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போத் பயங்கரமான சத்தம் கேட்டது, நான் கதவை திறந்து பார்த்த போது, அந்த இளைஞன் உதவுங்கள், காப்பாற்றுங்கள் என்னை துரத்தி வருகின்றனர் என்று கத்தினர்.

அதன் பின் அந்த மூன்று பேர் அவரை சிரித்தப்படி வெட்டியதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தைப் பற்றி Naqueeb Khan என்ற 32 வயது நபர் கூறுகையில், நான் இந்த சம்பவத்தை பார்த்தேன், அப்போது அந்த இளைஞன் ஒரு வித பயத்தில், ஓடியபடியே எனக்கு உதவுங்கள், கதவைத் திறங்கள், என்னை துரத்தி வருகின்றனர் என்று கத்தினர்.

நான் அவருக்கு உதவுவதற்கு வெளியே சென்றேன், ஆனால் அந்த இளைஞனை காப்பாற்ற முடியவில்லை, அதற்குள் அவர்கள் ஒரு காரில் ஓடிவிட்டனர். ஒரு தந்தையாக எனக்கு அவர்கள் குடும்பத்தை நினைத்து கவலை இருந்தது என்று கூறியுள்ளார்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சம்பவம் நடைபெற்ற சில தூரத்தில், அவர்கள் தப்பிச்சென்றதாக கூறப்பட்ட கார் எரிந்த நிலையில் கிடந்தது, விசாரணையின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம், சிசிடிவி கமெராக்களையும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.