தொடரும் ஈரானின் அட்டூழியம்..! பொறுமை காத்த பிரித்தானியா சீறி எழுந்தது!

ஈரானுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வளைகுடாவில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக கடல்சார் பாதுகாப்புப் பணியில் அமெரிக்காவுடன் பிரித்தானியா இணைந்துள்ளது.

கடந்த யூலை 4 ம் திகதி பிரித்தானியா கடற்படையினர் ஜிப்ரால்டர் கடற்கரையில் சிரியாவிற்கு எண்ணெய் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஈரானிய கப்பலைக் கைப்பற்றினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் பிரித்தானியா எண்ணெய் டேங்கரை ஈரான் கைப்பற்றியது. இதைதொடர்ந்து இந்த நடவடிக்கையை பிரித்தானியா முன்னெடுத்துள்ளது.

வளைகுடாவில் எங்கள் கவனம் தற்போதைய பதட்டங்களை குறைப்பதில் உறுதியாக உள்ளது என்று கப்பலின் கமெண்டர் அதிகாரி ஆண்டி பிரவுன் கூறினார்.

ஆனால், கடல்வழிசெலுத்தல் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு உறுதியளிப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டின் முக்கிய நோக்கமே இது தான்.

கடந்த மாதம் முதலே வளைகுடாவில் பிரித்தானியாவின் டங்கன் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது, அனுபப்பட்டுள்ள பிரித்தானியா போர்க்கப்பல் எச்.எம்.எஸ் கென்ட் வளைகுடாவில் டங்கனுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் வெளிநாட்டுக் கப்பல்களைக் கைப்பற்றி வரும் விளைவாக, துபாய் மற்றும் அரேபிய வளைகுடாவைச் சுற்றியுள்ள பயணங்களை பி அண்ட் ஓ குரூஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளதால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க சர்வதேச கடல்சார் பாதுகாப்புப் பணியை அறிவித்துள்ளன.