ஜேர்மணியில் தேடப்படும் சிறார் பாலியல் துஸ்பிரயோக குற்றவாளிக்கு எதிராக புதிய இரு சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மானியரான 58 வயது எரிக் என்பவர் உள்ளூர் பொலிசாரால், சிறார் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் தேடப்பட்டு வருகிறார்.
பல சிறார்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், திடீரென்று அவர் மாயமானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபர் சுவிஸ் எல்லையில் கடைசியாக காணப்பட்டதாகவும், அவர் சுவிட்சர்லாந்தில் பதுங்கி இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தற்போது எரிக் மீது 14 வயதுக்கு உட்பட்ட இரு சிறார்கள் தொடர்பிலான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறும் பொலிசார்,
மேலும் பல பாதிக்கப்பட்ட சிறார்கள் தாமாகவே முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது புகார் தெரிவித்துள்ள இரு சிறார்களும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எரிக்கின் உறவினர்களே என கூறப்படுகிறது.