நெஞ்சை உருகவைக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பெண் தன்னுடைய நன்றியை தெரிவிப்பதற்காக இராணுவ வீரர்களின் கால்களை தொட்டு வணங்கும் வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி நகரமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேரழிவுகரமான வெள்ளத்தால் கோலாப்பூர், சாங்லி, சதாரா, புனே மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் இருந்து 2.85 லட்சத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாகவும், ஐந்து மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சாங்லி நகரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவ வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் மீட்கப்பட்ட பெண் ஒருவர் தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் விதமாக, இராணுவ வீரரின் கால்களை தொட்டு வணங்கினார்.

மனதை தொட்ட சம்பவம் இது என பத்திரிக்கையாளர் நீரஜ் ராஜ்புத், வீடியோவினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.