ரெட் அலெர்ட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட்.!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல கடலோர மாவட்டங்களில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

கோலாபூர் மாவட்டத்தில் இருக்கும் மக்கள் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகப்படியான மக்கள் இருப்பிடம் இன்றி கடும் மழையால் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இதுபோலவே கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் பாலக்காடு, திரிச்சூர், வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

ஒடிசா, ஹிமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடுமையான மழையாலும் வெள்ளப்பெருக்காலும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. தேசிய பேரிடர் பாதுகாப்பு மீட்புப் படையினர் அனைத்து மாநிலங்களிலும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து மீட்டு ச் செல்கின்றனர்.

கடுமையான மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பல்வேறு மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.