மகளின் கண்முன்னே காதலனுடன் சென்ற தாய்: உறவுகளுக்கு காட்டி கொடுத்த மகள்

இந்தியா, பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நெல்லையில் ஒரு அரச பாடசாலையொன்றில், ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த ஆசிரியைக்கு 15 வயது நிரம்பிய மகளொருவரும் இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆசிரியைக்கு வேறு ஒரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது அந்த ஆசிரியையின் மகளுக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்பவ தினத்தன்று அந்த ஆசிரியை தனது கள்ளக்காதலனுடன் மகள் கண் முன்னே வீட்டின் படுக்கையறைக்குள் சென்றுள்ளனர்.

இதை பார்த்து விரக்தியும் கோபமும் கொண்ட மகள், அறையின் கதவை வெளியில் இருந்து பூட்டிவிட்டு உறவினர்களை தொலைபேசியில் அழைத்து, அனைவரையும் வரவைத்துள்ளார்.

பின்னர் வந்து சேர்ந்த உறவினர்கள் அனைவரும் குறித்த ஆசிரியையையும், குறித்த கள்ளக் காதலனான இளைஞரையும் பிடித்து சரமாரியாக தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.