கங்கனா நடித்து ஹிந்தியில் ஹிட் ஆன குயின் படத்தினை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் தற்போது ரீமேக் செய்துள்ளனர்.
தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ எனவும், தெலுங்கில் தமன்னா நடிப்பில் ‘தட்ஸ் மகாலட்சுமி’ எனவும், கன்னடத்தில் ‘பட்டர்ஃபிளை’ எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘ஜாம் ஜாம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் ரீமேக்கான ‘பாரீஸ் பாரீஸ்’ படம் தற்போது சிக்கலில் மாறியிருக்கிறது. படத்தை பார்த்த சென்சார் போர்டு அதில் உள்ள பல காட்சிகள், வசனங்கள் ஆகியவற்றை நீக்கச்சொல்லி கேட்டுள்ளது.
இதனால் தற்போது படத்தினை மறுபரிசீலனை செய்வதற்கு ஏதுவாக ரிவைசிங் கமிட்டியின் பார்வைக்கு எடுத்து செல்வது என தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.