200 பேருடன் லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு… பயணிகளின் நிலை என்ன?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் திடீரென்று விமானம் முழுவதிலும் புகை மூண்டதால், உள்ளே இருந்த பயணிகள் சிலர் பயத்தில் கதறி அழுதுள்ளனர்.

நேற்று பிற்பகல் பிரித்தானியா தலைநகர் லண்டனிலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான BA422 விமானம் தரையிரங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, இன்ஜினில் திடீரென்று தீ ஏற்பட்டதால், இதன் காரணமாக விமானம் முழுவதிலும் புகை மூண்டது.

இதனால் உடனடியாக விமானம் ஸ்பெயினின் Valencia விமானநிலையத்தில் அவசர, அவசரமாக தரையிரக்கப்பட்டது.

அதன் பின் விமானத்தின் அவசர வழி உடனடியாக திறக்கப்பட்டதால், உள்ளிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

இது குறித்து விமானத்தில் பயணம் செய்த Glasgow-வைச் சேர்ந்த Gayle Fitzpatrick கூறுகையில், விமானம் தரையிரங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது.

அப்போது அந்த புகையால் ஒரு வித மோசமான வாசனை வந்தது என்று கூறியுள்ளார்.

எதற்காக இப்படி புகை வருகிறது? என்பது குறித்து விமான பணியாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, அதன் பின் ஆக்சிஜன் மாஸ்க் வந்தது, அதை முகத்தில் அணிந்து கொண்டோம், அதன் பின் எப்படியோ விமானம் தரையிரக்கப்பட்டது.

அப்போது அவசர வழி கதவு திறக்க, சிலர் இந்த மோசமான சம்பவத்தால் கதறி அழுதனர் என்று மற்றொரு பெண் பயணி ஒருவர் கூறியுள்ளார்.

இருப்பினும் விமானத்தை எந்த ஒரு விபத்திலும் சிக்காமல் பாதுகாப்பாக தங்களை தரையிரக்கியதற்கு நன்றி என்றும் ஒரு சில பயணிகள் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது கிடைத்துள்ள தகவல் படி இந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்ததாகவும், அதில் 20 பேருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகாவும், அதில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் 16 பேருக்கு இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக பயத்தில் இருப்பதாகவும், அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.