மரணதண்டனையை ஒழிக்கும் பிரேரணை சட்டவிரோதம் – மைத்திரி

மரண தண்டனையை ஒழிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று சட்டமா அதிபர் தமக்கு அறிவித்திருப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வரை தூக்கிலிட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முற்பட்ட நிலையில், மரண தண்டனையை ஒழிக்கும் தனிநபர் பிரேரணையை  ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தப் பிரேரணை சட்டரீதியானது அல்ல என்று  சட்டமா அதிபர் தனக்கு அறிவித்திருப்பதாக சிறிலங்கா அதிபர் இன்று திவுலப்பிட்டியவில் நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்