பயத்தில் இலங்கை பெண் லொஸ்லியா! கடும் சோகத்தில் ரசிகர்கள்.. அம்பலப்படுத்திய புகைப்படம்

பிக் பாஸ் வீட்டில் நேற்று லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

முதல் முறை ஜெயிலுக்கு போகும் போது சந்தோஷமாக சென்ற லொஸ்லியா நேற்று மிகவும் கவலையோடு சென்றார்.

அதற்கு முக்கிய காரணமே, கடந்த வாரம் லொஸ்லியா மற்றும் அபிராமியை பிக் பாஸ் சிறையில் வச்சி செய்திருந்தார்.அதன் பின்னர் தான் ஜெயிலின் கடினத்தன்மை மற்ற போட்டியாளர்களுக்கும் வந்தது. இந்த நிலையில் இந்த முறை என்ன தண்டனை தர போகிறாறோ என்று ஷெரின் மற்றும் லொஸ்லியா கடும் பீதியில் இருந்து வருகின்றனர்.

இதேவேளை, இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் உரலில் மாவு அறைக்கும் தண்டனை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்கு சான்றாக பிக் பாஸ் சிறையில் உரல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் வெச்சி செய்ய போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

ஏற்கனவே, டாஸ்க் செய்ய முடியாது என்ற காரத்தினால் தான் சிறைக்கு வந்தார். இங்கும் பிக் பாஸ் வேலையை காட்டிட்டாரே என்று தான்.