யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் நோய் நொடிகள் எதுவுமின்றி 107 வயது வரை வாழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இராசையா சின்னையா என்ற மூதாட்டியே 107 வருடங்கள் வாழ்ந்து, கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூதாட்டிக்கு மூன்று பிள்ளைகளும் ஐந்து பேரப்பிள்ளைகளும் ஒன்பது பூட்டபிள்ளைகளும் உள்ளனர்.
இந்த மூதாட்டிக்கு இதுவரை வாழ்ந்த காலங்களில் ஒரு நோய் கூட தாக்கவில்லை என்றும் இதனால் எந்தவிதமானான மருந்துகளும் இவர் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.






