விமானத்தில் இருந்த பயணிகளை சிரிக்கவைக்க பணிப்பெண் செய்த வினோத செயலை பலருக்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும் அதை சகித்துக் கொள்ளாத பயணி ஒருவர் குறித்த விமான நிறுவனத்திடம் புகாரளித்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நேஷ்வில்லேவில் இருந்து பிலடெல்பியாவுக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் தனது சூட்கேசை வைப்பதற்காக லக்கேஜ் பகுதியை திறந்தார். அப்போது லக்கேஜ் பகுதிக்குள் விமான பணிப்பெண் ஒருவர் படுத்திருந்ததை பார்த்து திகைத்துப்போனார்.
பின்னர் அந்த பயணி, பணிப்பெண்ணை கீழே இறங்க அறிவுறுத்தியபோது, 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் இறங்க மறுத்து அடம் பிடித்தார்.
பயணிகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காக பணிப்பெண் இவ்வாறு செய்ததாக விமான ஊழியர்கள் கூறினர்.
ஆனாலும் இதனை சகித்துக்கொள்ளாத பயணி ஒருவர், விமானம் தரையிறங்கியதும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இதுதொடர்பாக புகார் அளித்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம் வாடிக்கையாளர்களை சிரிக்க வைக்கும் நோக்கிலேயே பணிப்பெண் அவ்வாறு செய்தார்.
அதே சமயம், பயணிகளின் பாதுகாப்பில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்து கொள்வதில்லை என விளக்கமளித்துள்ளது.