காஜல் அகர்வாலை அடைவதற்காக ரூ.75 லட்சத்தை இழந்த பிரபல தொழிலதிபரின் மகன்!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் பிரதீப். இவருக்கு தியேட்டர், தங்கும் விடுதி, பள்ளி, கல்லூரி சூப்பர் மார்க்கெட், அடுக்குமாடி வீடுகள் என்று கொடிகட்டி பறக்கும் முக்கிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை.

பெரும்புள்ளி என்பதால், போலீசார் அதிரடியாக தீவிர வேட்டையில் இறங்கினர். இடையில் அவரது தந்தையை ப்ரதீப் தொடர்பு கொண்டதை அடுத்து அந்த நம்பரை வைத்து ப்ரதீப் கொல்கத்தாவில் இருப்பதை அறிந்து கொண்டனர்.

அவரை ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதாவது, இணையதளம் ஒன்றின் மூலம் சினிமா நடிகைகளை விரும்பும் இடத்திற்கு அழைக்கலாம் என்பதை நண்பர் ஒருவர் கூற கேட்டு, அந்த இணையதளத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார், ப்ரதீப்.

10 நிமிடத்திற்குள் அவரது எண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. அவருடன் பேசிய ஒருவர், உங்களுக்கு பிடித்த நடிகையை தேர்வு செய்யுமாறு கூற, அதற்கு பிரதீப் காஜல் அகர்வால் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, பிரதீப்பின் மற்ற புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறும், செயல்பாட்டுக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதற்காக முன்பணமாக ரூ.25 ஆயிரத்தை தான் சொல்லும் அக்கவுண்ட் நம்பரில் செலுத்த வேண்டும் என்று அந்த நபர் பிரதீப்பிடம் கூறியுள்ளார். அதற்கும் காஜல் அகர்வாலின் மோகத்தால் ரூ.25 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

நடிகை எப்போது வருவார் என்று கேட்க, காஜல் அகர்வாலுடன் அவர் அரை நிர்வாண புகைப்படத்தில் இருப்பது போன்று மார்பிங் செய்து பிரதீப் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்து அவரை மிரட்டி பணம் கரக்க ஆரம்பித்துள்ளார் மர்ம நபர். இதன் மூலம் மொத்தம் ரூ.75 லட்சம் வரையில் பிரதீப்பிடமிருந்து கறந்துள்ளார். இதனால் தான் அவர் தொலைந்து போகும் மனநிலைக்கு வந்துள்ளார்.

அதன் பிறகு மர்ம நபரின், வங்கி கணக்கு எண்ணைக்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை அசோக்நகர் பகுதியிலுள்ள லாட்ஜில் தங்கியிருந்த தயாரிப்பாளர் சரவணக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாராணை மேற்கொண்டனர். அதில், பிரதீப்பை மிரட்டி அவரிடமிருந்து வாங்கிய பணத்தில் ரூ.65 லட்சத்தை உலககோப்பை கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் செலவு செய்ததாக கூறினார்.

இதையடுத்து, அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். சரவணக்குமார் மீது பண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.