தந்தையால் துஸ்பிரயோகம்… முதியவருடன் திருமணம்!

சொந்த தந்தையின் துஸ்பிரயோகங்களில் இருந்து தப்பி துருக்கியில் தலைமறைவாக இருக்கும் சவுதி அரேபிய சகோதரிகள் இருவர் கனடாவில் அடைக்கலம் கோரியுள்ளனர்.

கடந்த ஆறு வாரங்களாக சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயதான துவா மற்றும் 20 வயதான தலால் அல் ஷோவாக்கி ஆகிய இரு சகோதரிகளும் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் தலைமறைவாக உள்ளனர்.

தங்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கும் தந்தையிடம் இருந்து தப்பி வந்ததாக கூறும் இருவரும், தங்களின் விருப்பத்திற்கு எதிராக முதியவர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க தங்கலின் தந்தை முயற்சி மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

துருக்கியில் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் சென்ற நிலையில், தாங்கள் இருவரும் தப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதம் 10 ஆம் திகதி முதல் தலைமறைவாக இருக்கும் இருவரும் தற்போது கனடாவில் அடைக்கலம் கோரியுள்ளனர்.

எங்களுக்கு உதவ எவரும் இல்லை என கதறும் இருவரும், கொடூர தந்தையிடம் இருந்து தப்புவதை தவுர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சவுதியில் தங்களை சிறை கைதி போன்று தந்தை நடத்தியதாக கூறும் துவா, அடிப்படைவாதியான அவர் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயற்சி செய்தார் எனவும்,

தங்களுக்கு என ஒரு கனவு இருப்பதை அவர் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை என்றார்.

துருக்கியில் கூட, கழிவறையை திறந்த நிலையில் பயன்படுத்தவே அவர் கட்டளை இட்டதாகவும் கண்ணீருடன் துவா தெரிவித்துள்ளார்.

தற்போது தாங்கள் இருவரும் தலைமறைவாக இருந்தாலும், தங்களது தந்தை கண்டிப்பாக எங்களை தேடுவதை நிறுத்த மாட்டார் எனவும், அவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.