இந்திய பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஷாமியா அர்சூ என்கிற இந்தியப் பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, அந்த அணிக்காக ஒன்பது டெஸ்ட் மற்றும் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2017 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் முக்கிய நபராக செயல்பட்டவர்.

இருப்பினும் அவருடைய பந்துவீச்சியில் தொடர்ச்சியான எழுச்சி இல்லாததால் நடந்து முடிந்த உலகக்கோப்பை அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியாவின் அரியானா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட ஷாமியா அர்சூ என்பவரை, ஹசன் அலி திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஷாமியா இங்கிலாந்தில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனியார் விமான நிறுவனத்தில் வேலை செய்தவாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

முன்னதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதியன்று திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.