ஒட்டுக் கேட்கப்படும் அந்தரங்க உரையாடல்கள்!

பிரித்தானிய தம்பதிகள் அந்தரங்கமாக பேசிக்கொள்ளும் விடயங்களையும் அமேசான் ஊழியர்கள் ஒட்டுக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தரங்கமாக, ஒரு ஜோடி நெருக்கமாக இருக்கும்போது எழுப்பும் சத்தங்கள் கூட, அலெக்சா எக்கோ ஸ்பீக்கர்களை செயல்படச் செய்து விடும் என்பதோடு, அவர்களிடையேயான உரையாடல்களையும் அவை பதிவு செய்துவிடும் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலாக, அந்த கருவியை மேம்படுத்துவதற்காக, அமேசான் ஊழியர்கள் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்பது வழக்கம் என்பதும் தெரியவந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க பயங்கர குற்றச் செயல்கள் குறித்த உரையாடல்களையும் அலெக்சா பதிவு செய்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அமேசான் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தம்பதி பாலுறவு கொள்ளும்போது ஏற்படும் சத்தமோ, அல்லது ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போது ஏற்படும் சத்தமோ கூட அமேசான் ஊழியர்களால் கேட்கப்பட்டுள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Privacy International என்ற அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான உரையாடல்கள், வர்த்தக ஒப்பந்தங்கள், குற்றவியல் நடவடிக்கைகள், பாலியல் உறவின்போது பேசும் அந்தரங்க விடயங்கள் என எண்ணிக்கையில் அடங்கா தனிப்பட்ட விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.