அடுத்தடுத்து விபத்து! எட்டு இராணுவத்தினர் பலி

தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற விபத்துகளில் எட்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த விபத்துகள் குறித்து இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழர்கள் அதிகம் வாழும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, வவுனியா உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்துகளில் 8 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளார். இராணுவத்தினர் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி பலியாவதும் படுகாயமடைவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்துகள் குறித்து இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.