மனித குழந்தை உருவத்தில் குட்டி போட்ட ஆடு..

கர்நாடக மாநிலத்தில் ஆடு ஒன்று குழந்தை உருவத்தில் குட்டி போட்டது அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது.

ர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் மதுரகிரி தாலுக அருகில் ஒரு கிராமத்தில் வசிப்பவர் தான் ஜானகி ரம்யா. இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

அதில் ஒரு குட்டி சாதராணமாக இருந்துள்ளது. மற்றொரு ஆடு தான் பார்ப்பதற்கு குழந்தை போல் இருந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் அனைவரும் காண கூட்டம் கூட்டமாய் அலைமோதினர்.

மேலும் சிலர் அந்த ஆட்டு குட்டியை கடவுளாக நினைத்து புதிய அவதாரம் என்று வணங்கி வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ஆடு இறந்து போனது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது.