வெளியூரில் வசித்த கணவன்.. தனியாக இருந்த மனைவிக்கு ஏற்பட்ட நிலை!

தமிழ்நாட்டில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரையன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30).

இவருக்கும், சுபிதா (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. குமார் திருப்பூரில் தங்கியிருந்து லொறி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உடல்நிலை சரியில்லாமல் இருந்த சுபிதாவை, ராஜ்குமாரின் தங்கை சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுபிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சுபிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுபிதாவின் பெற்றோர் பொலிஸ் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி சுபிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர் உடலை வாங்க மாட்டோம் என அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர்கள் சுபிதா சடலத்தை பெற்று கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.