சொந்த மகளையே 8 ஆண்டுகள் சிறையில் தள்ளிய கொடூரன்!

துபாய் அரசரின் இரு மகள்கள் தொடர்பில், தற்போது விவாகரத்து கோரும் இளவரசி ஹயா உண்மையை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும் என உறவினர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இளவரசி ஹயா துபாயில் இருந்து வெளியேற முக்கிய காரணம், தமது உயிருக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதாலையே எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

துபாய் ஆட்சியாளரின் 6 மனைவிகளில் ஒருவரின் சகோதரிக்கு மகனான மார்கஸ் எசாப்ரி என்பவர் சர்வதேச ஊடகம் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது பிரித்தானிய நீதிமன்றத்தில் இளவரசி ஹயா முன்னெடுக்கும் விவாகரத்து வழக்கானது துபாய் அரசரின் உண்மை முகத்தை உலக மக்களுக்கு அம்பலப்படுத்தும் என கூறும் அவர்,

இளவரசி ஹயா மட்டுமின்றி, இளவரசி லதிபா மற்றும் இளவரசி ஷம்சா ஆகியோருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும் அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.

இந்த நடவடிக்கைகளை இளவரசி ஹயா கண்டிப்பாக முன்னெடுப்பார் என தாம் நம்புவதாக கூறும் எசாப்ரி, இளவரசி லதிபாவுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் தகவல் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறிய இளவரசி லதிபா, பின்னர் இந்திய கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் போதை மருந்து செலுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளானார் எனவும், தற்போது அவரது நிலை என்ன என்பது தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும் எசாப்ரி கவலை தெரிவித்துள்ளார்.

லதிபாவின் சகோதரி ஷம்சா இதேபோன்று நாட்டைவிட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்த நேரம், அவரையும் மீட்டு துபாய் அழைத்து சென்ற நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக அவர் தொடர்பிலும் எந்த தகவலும் இல்லை என எசாப்ரி தெரிவித்துள்ளார்.

நீண்ட 8 ஆண்டுகள் இளவரசி ஷம்சா சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக கூறும் எசாப்ரி, துபாய்க்கு திரும்பிய பின்னர் எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் ஷம்சா கலந்துகொண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

இளவரசி ஷம்சாவு நேர்ந்த கொடுமைகளே ஹயாவை இந்த முடிவுக்கு தள்ளியதாக தாம் நம்புவதாக கூறும் எசாப்ரி,

ஷம்சா தமக்கு பல கடிதங்கள் அனுப்பியுள்ளதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எசாப்ரி தெரிவித்துள்ளார்.