`கடலில் தரையிறங்கிய விமானம்!’

கடந்த வருடம் பசிபிக் கடலில் உள்ள மைக்ரோனேசியாவில் இருக்கும் சூக் (Chuuk) தீவிலுள்ள விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள நீர்ப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

போன்பேய் விமான நிலையத்தில் இருந்து பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் வழியில், ஏர் நியூகினி விமானம் வெனோ தீவில் உள்ள சூக் விமான நிலையத்தில் நின்று செல்லும்.

பயணிகள் விமானமான இதில், அப்போது 47 பேர் பயணித்தனர். இந்த எண்ணிக்கையில் 35 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் அடங்குவர்.

மோசமான வானிலை காரணமாக நடந்த இந்த விபத்தில் யாருக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றே முதலில் கருதப்பட்டது.

ஆனால், பயணி ஒருவர் இந்த விபத்தில் இறந்தது அடுத்த மீட்புப்பணிகளில் தெரியவந்தது.

ஓடுதளத்துக்கு 1,500 அடிக்கு முன்பே இந்த விமானம் தரையிறங்கியது எப்படி, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என பப்புவா நியூ கினியா விசாரணை ஆணையம் ஒன்று அமைத்து விசாரித்து வந்தது.

இதில் விமானிகளின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.

வைரலாகியிருக்கும் வீடியோவில் “மிகவும் தாழ்வாக இருக்கிறோம், மிகவும் தாழ்வாக இருக்கிறோம்” என்று கோ-பைலட்டின் கணினி குரலில் எச்சரிப்பதையே நம்மால் கேட்கமுடிகிறது.

“17 முறை கணினிகளால் தெளிவான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணம்.

இந்த விமான குழு ஏற்கெனவே இது போன்ற எச்சரிக்கைகள் தேவையில்லாமல் வருபவை, இதனால் ஒன்றும் ஆகிவிடாது என அலட்சியமாக இருந்ததும் தெரியவந்துள்ளது” என்கிறது விசாரணை அறிக்கை.

52 வயதான கேப்டனின் கீழ்தான் இந்த விமானம் இயக்கப்பட்டது. அவருக்கு 20,000 மணிநேரத்துக்கு மேலான விமானம் ஓட்டும் அனுபவம் இருந்திருக்கிறது.

ஆனாலும், அந்த வானிலையில் நிதானமில்லாத தரையிறங்கும் முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

First officer-ஆக இருந்தவரும் ஆபத்தை உணர்ந்து அவரை எச்சரிக்க தவறியிருக்கிறார். விபத்துக்கு முன்பு விமான காக்-பிட்டில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை விமானி ஒருவர் வீடியோவாகப் படம்பிடித்திருந்தார்.

காக்-பிட்டில் கேமரா வைப்பது தங்களது கவனத்தை சிதறடிக்கும் என்று கூறும் விமானிகளே இப்படி வீடியோ எடுக்கலாமா என்ற கேள்வியும் இதனால் எழுந்துள்ளது

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

இதில் “மிகவும் தாழ்வாக இருக்கிறோம், மிகவும் தாழ்வாக இருக்கிறோம்” என்று கோ-பைலட்டின் கணினி குரலில் எச்சரிப்பதையே நம்மால் கேட்க த்முடிகிறது.

இந்த விபத்தில் மரணித்த ஒருவரும், சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்ட மோதலில் உண்டான காயத்தின் காரணமாகத்தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் நெறிப்படுத்தப்பட வேண்டும், இல்லையேல் இதைவிட மோசமான விபத்துகளையும் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கிறது இந்த விசாரணை அறிக்கை.