சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத சரவணபவன் ராஜகோபால் உடல்!

உணவகத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்திய சரவணபவன் ராஜகோபால் உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படாத நிலையில் அவரின் பூர்வீக தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னையடி என்ற கிராமத்தில் 1947ம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால்

1973ம் ஆண்டு சென்னைக்கு வந்து, கே.கே. நகரில் மளிகைக் கடை ஒன்றை திறந்தார்.

பின்னர் 1981ம் ஆண்டு கே.கே.நகரிலேயே ஒரு சிறிய ஹொட்டலை திறந்தார். அது தான் அவர் திறந்த முதல் ஹொட்டலாகும்.

முருகன் மீது அதீத பக்தி கொண்டதால் தனது ஹொட்டலுக்கு சரவணபவன் என பெயரிட்டார்.

இவரது ஹொட்டலின் சாம்பார், மற்ற இடங்களை விட சுவையாக இருந்ததால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

மக்களின் ஆதரவு, எதிர்பார்த்ததை விட கிடைத்த வருமானம் என்ற இரண்டு தூண்களுடன் தனது வியாபாரத்தை விரிவுப்படுத்த தொடங்கினார் ராஜகோபால். அவ்வாறு தொடங்கிய முயற்சி இன்று இந்தியாவில் மொத்தம் 33 கிளைகள், வெளிநாடுகளிலும் ஹொட்டல்கள் என 45 கிளைகளை தாண்டியது.

ஆனால் பெண் சபலத்தால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய வீழ்ச்சியை சந்தித்தார் இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மூன்று நாட்களுக்கு முன்னர் ராஜகோபால் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் சடலம் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்குள்ள சுடுகாட்டில் ராஜகோபால் சடலம் புதைக்கப்படலாம் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரின் பூர்வீக தோட்டத்தில் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது.