பால் பாக்கெட்டால் மலர்ந்த கள்ளக்காதல்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பகுதியில் வசித்து வந்த பெண்மணிக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஆகும். இவருக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் ஆகும் நிலையில்., இவருக்கு மூன்று வயதுடைய குழந்தை உள்ளது. இவர் தனது குழந்தைக்காக அங்குள்ள கடையில் பால் வாங்குவது வழக்கமான ஒன்றாகும்.

இவர் அந்த கடையில் பால் வாங்கும் சமயத்தில்., கடையில் இருந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இருவரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

உல்லாசம் அனுபவித்து சுகம் கண்ட கள்ளக்காதலன்., தனது நண்பர்களிடமும் இந்த விஷயத்தை கூறியுள்ளான். இதனை கேட்ட மூவரும்., தனித்தனியே அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இந்த நிலையில்., பெண்ணிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்த நிலையில்., இதனை புகைப்படமாக பதிவு செய்து., உனது உறவினர்களிடம் கூறிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். எங்களது மிரட்டலுக்கு பணிந்து கொடுத்து எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

இதனை கேட்டு பயந்து போன பெண் மூவரின் ஆசைக்கும் இணங்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில்., இவர்களின் தொல்லைகள் தாங்க இயலாத பெண் இறுதியாக தற்கொலைக்கு முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதை அடுத்து., இவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்ததை அடுத்து இந்த அதிர்ச்சி செய்தி தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காம கொடூரன்களை கைது செய்தனர்.