அப்பா என்று அழைக்க மாட்டேன்: சொல்லும் இளம்பெண்!

சமீபத்தில் சிங்கம் ஒன்றைக் கொன்று, அதன் அருகில் முத்தமிடும் கனேடிய தம்பதியின் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

அந்த தம்பதியரின் மகள், தன் தந்தையின் கொடூர செயலைக் கண்டு கோபமுற்று, இனி அவரை தந்தை என்று அழைக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

Darren மற்றும் Carolyn Carter என்ற அந்த கனேடிய தம்பதி வெளியிட்ட புகைப்படத்தைக் கண்டு அவர்களை சாபமிட்டவர்களும் உண்டு.

இந்நிலையில், அந்த தம்பதியின் மகளான Sydney Carter (19) யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அழிந்து வரும் இனமான சிங்கங்களை கொல்லும் தன் தந்தை ஒரு கொடூரமான மனிதன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் Carter, சிங்கம் போன்ற ஒரு அழகான விலங்கைக் கொல்வதை பெருமையாக நினைக்கும் இந்த மாதிரியான ஆட்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.

பத்து ஆண்டுகளாக தனது அப்பாவை சந்திக்கவில்லை என்று கூறும் Carter, சிங்கத்தைக் கொல்வதற்காக அவர் 12,000 பவுண்டுகள் செலுத்தியதைக் கேட்டு அருவருப்பு அடைந்ததாக தெரிவிக்கிறார்.

இப்படி சுற்றுலாவுக்கு ஏராளம் செலவளிக்கும் அவர், தான் பல்கலைக்கழகத்தில் படிக்கத் தொடங்கியதும் தனக்கு உதவிப்பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிவிக்கிறார்.

Darren, இந்த வீடியோவை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றால், ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், உங்களை நான் இனி அப்பா என்று அழைக்கமாட்டேன், நீங்கள் ஒரு கொடூரமான மனிதர், என்கிறார் Carter.

நான் விலங்குகளை நேசிப்பவள், யாரும் அவற்றை துன்புறுத்துவது எனக்கு பிடிக்காது, ஆனால், என் அப்பாவே அப்படி செய்கிறார் என்று தெரியவரும்போது, உங்களை நான் இனி எனது அப்பாவாகவே கருதமாட்டேன் என்று கூறியுள்ளார் Carter.