ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளும் தோழிகள் என்றாலும் கூட மூவரும் வெவ்வேறு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் கருங்கல்பாளைய மழை பொய்த போது இவர்கள் விளையாடியதாகவும், இதனால் மூன்று விட்டு பெற்றோர் சிறுமிகளை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வழக்கம் போல கடந்த திங்கள் கிழமை காலை பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் மாலை வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மூவரும் ஒரே நேரத்தில் காணமால் போனதால் திட்டம்போட்டு சிறுமிகள் மூவரும் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தெரிவந்துள்ளது, இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மாணவிகள் கடத்தப்பட்டர்களா அல்லது அவர்களாகவே வீட்டை விட்டு வெளியேறினார்களா என போலீஸ்சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் ஒரே நேரத்தில் மாயமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.