உலக கோப்பை ஜோதிடரின் அதிரடி.! நயன்தாராவிற்கு எப்போது, யாருடன் திருமணம்??

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அரை இறுதி குறித்தும், வெற்றி பெறப்போகும் அணிகள் குறித்தும் கச்சிதமாக முன்கூட்டிய அறிவித்தவர் பாலாஜி ஹாசன் ஜோதிடர். இவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் இதுவரை உலக கோப்பையை வெல்லாத இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு தான் வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

அதன்படி இரண்டு அணிகளுமே டிராவில் தான் முடிந்தது. இருப்பினும் பவுண்டரி அடிப்படையில், இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாகை சூடப்பட்டது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஜோதிடர் பாலாஜி நயன்தாரா ஜாதகம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இது நயன்தாராவின் உண்மையான ஜாதகம் என்று நினைக்கிறேன். அப்படி இது உண்மையான சாதகமாக இருக்கும் பட்சத்தில் நயன்தாராவிற்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற்று முடியும் என கூறியுள்ளார். இதனை கேட்டதும் நயன்தாராவின் ரசிகர்களுக்கு பெரும்மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு துறைகளில் பாலாஜி கூறியது துல்லியமாக நடைபெற்றுள்ளது. எனவே நயன்தாராவின் திருமணமும் நடக்குமா என அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது பாலாஜியின் பேச்சு. விக்னேஷ் சிவனுக்கு பல இயக்குனர்கள் விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கும் என்று பாலாஜி குறிப்பிடவில்லையே என சிலர் சர்ச்சையை கிளப்பிய வண்ணமிருக்கின்றனர். நயன்தாராவின் இந்த காதலாவது திருமணத்தில் முடிய வேண்டும் என்பது பலரின் பிரார்த்தனையாக இருந்து கொண்டிருக்கிறது. பாலாஜி கூறியது மட்டும் நடந்துவிட்டால், திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், நயன்தாராவின் ரசிகர்களும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.