முகம் முதிர்ச்சி அடையாமல் இருக்க ஆரோக்கியமான வழிமுறைகள்???

நாம் ஒரு இளமையான, ஆரோக்கியமான மற்றும் இயற்கையாக ஒளிரும் முகத்தை, பெறுவது மிக எளிதாகும். இதில், வியப்பு ஒன்றும் இல்லை, உங்களின் தேடலுக்கு பழமையான யோகா அறிவியல் வடிவில், பதில் உள்ளது. நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் மெருகேற்றக்கூடிய பயிற்சிகள் யோகாவில் உள்ளன. முகத்தில் மட்டும்தான், தசைப்பகுதி எலும்பில் ஒட்டாமல், தோலுடன் நேரடியாக ஒட்டியுள்ளது.

முக யோகா என்பது தசைகளை வைத்து செயல்படுகிறது: கழுத்து, வாய், கன்னங்கள், கண்கள், நெற்றி. இவற்றை மெருகேற்றுவதால், அதுசார்ந்த இணைப்புத் திசுக்களிலும் மேம்பாடு ஏற்பட்டு, அங்கே ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது. மேலும், கொலாஜெனில் உள்ள மீள்சக்தியுள்ள நார்த்திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன்மூலமாக, , முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது.

இளமையான முகம் பெற சில வழிமுறைகள்:

1-வாய் வழியாக மூச்சை இழுத்து, கன்னங்களை உப்பச் செய்ய வேண்டும். உப்பிய கன்னங்களில் உள்ள சுவாசக் காற்றை 10-15 முறை, பலவிதமாக, மாற்றி மாற்றி தள்ளிவிட வேண்டும்.

2-உதடுகளை ஒன்றாக குவித்தபடி, சிரிக்க வேண்டும். ஆனால், பற்களை வெளியே காட்டக்கூடாது.

3-கன்னத் தசைகளை மேல்புறமாக தள்ள வேண்டும்.

4-வாயின் இரு மூலைகளிலும், கை விரல்களை வைத்து, அவற்றை கன்னம் வரை மேலே நகர்த்திச் செல்ல வேண்டும். அப்படியே 20 விநாடிகள் வைத்திருப்பது நலம்.

5-அவ்வப்போது, சில முறை ‘ஈ’ ‘ஓ’ எனச் சொல்வதால், கன்னத் தசைகள் உறுதியாகும்.

முக யோகா எளிதானது, எங்கு வேணாலும், எந்த நேரத்திலும் செய்யக்கூடியதாகும். இதன் நன்மைகள், மிகக்குறுகிய நேரத்திலேயே பலனடையலாம் தெரியும்.