தந்தையை தேடி சென்ற இந்திய சிறுமி: சடலமாக மீட்பு

குருபிரீத் வட இந்தியாவின் ஹசன்பூரில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். பியூ ஆராய்ச்சி மையத்தின் 2017ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்கக் கடற்கரையை அடைந்த 20 குடியேறியவர்களில் குருபிரீத்தின் தந்தையும் ஒருவர்.

குருபிரீத் பிறந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் தனது சொந்த ஊரை விட்டு வெளியேறினார். நியூயார்க்கில் வசித்து வந்த அவரது ஆவணங்கள் அமெரிக்க குடிவரவு நீதிமன்ற முறை மூலம் உருவாக்கப்பட்டிருந்தன.

அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய கூட்டணி கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின்படி, குருபிரீத்தும் அவரது தாயும் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையைத் தாண்டியவுடன் தனது தந்தையுடன் மீண்டும் இணைவதற்குத் திட்டமிட்டனர்.

மக்களை கடத்தல்காரர்கள் கையாள்வது, அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த உணவு எடுத்துக்கொள்தல் போன்றவற்றால் இந்த பயணம் ஆபத்தானது என்பதை அறியாமலே அவர்கள் புறப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் அரிஸோனாவில் உள்ள ஒரு சிறிய பாலைவன நகரத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் எதிர்பாராத விதமாக பிரிந்துள்ளனர். இதனையடுத்து குருபிரீத்தின் தாயார், மற்றொரு பயணிகளுடன் சேர்ந்து பயணத்தை துவங்கினார்

அதன்பிறகு “அவர்கள் ஒருவரையொருவர் மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று எல்லை ரோந்து டியூசன் துறையின் சிறப்பு செயல்பாட்டு மேற்பார்வையாளர் முகவர் பீட் பிட்கெய்ன் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியினை மேற்கோளிட்டுள்ளார்.

அவர்கள் பிரிந்த மறுநாளே வெப்ப பக்கவாதத்தால் நாவறண்டு சிறுமி இறந்த நிலையில் கிடந்ததை எல்லை ரோந்து முகவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாத்தா மற்றும் பாட்டி பெரும் வேதனை தெரிவித்துள்ளனர். அந்த செய்தியை கேள்விப்பட்டதும் நான் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன். தெளிந்ததும் அவள் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தேன் என அவருடைய பாட்டி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரு மதத்தினை சேர்ந்தவர்களின் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காகவே அவர்கள் புறப்பட்டதாக குருபிரீத் பெற்றோரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இதனையே நியூயார்க்கை தளமாகக் கொண்ட சீக்கிய கூட்டணியும் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. ஆனால் இதனை சிறுமியின் தாத்தா – பாட்டி மறுத்துள்ளனர்.