கெட்ட வார்த்தைகள் பேசிய மகன்., மகளை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய கொடூர பெற்றோர்.!!

பிரான்ஸ் நாட்டில் உள்ள லென்ஸ் நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 12 வயதுடைய மகன் மற்றும் 10 வயதுடைய மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வரும் வருகின்றனர்.

இந்த சமயத்தில்., குழந்தைகள் பொதுவாக கேட்ட விஷயத்தை அல்லது பார்த்த விஷயத்தை நமிடையே வெளிப்படுத்தும். இதனைப்போன்று கேட்ட
(கெட்ட) வார்த்தைகளை பேசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதுமட்டுமல்லாது குழந்தைகளை அடிப்பதை விடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பெற்றோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில்., குழந்தைகள் பெற்றோருடன் கொண்ட வாக்குவாதத்தின் போது கெட்ட வார்த்தைகளை உபயோகித்ததாக கூறியுள்ளனர்.