அசந்த நேரத்தில் தர்சனும், மீராவும் செய்த வேலை.!

பிக் பாஸ் வீட்டில் இருந்து, புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பும் வகையில் வெளியாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாக அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நான் சொல்வதும், செய்வதும் மட்டும் தான் சரி என்ற எண்ணத்தில் ஆரம்பத்திலிருந்தே இருப்பவர் வனிதா.

தன்னை எதிர்த்து வரும் போட்டியாளர்களையும், ஒன்று அணைத்துக்கொள்கிறார். அல்லது அவர்களை உதாசீனப்படுத்தி ஓரம் கட்டி விடுகிறார். இப்படி இருக்கும்போது ஒரு படி மேலே சென்று தலைவர் பதவிக்கான டாஸ்கில் இந்த கேம் சரி இல்லை, அந்த கேம் சரியில்லை இதில் குறைபாடு இருக்கிறது என பிக் பாஸ் இடமே சரமாரியாக கத்தி கொண்டு இருந்தார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத தர்ஷன், இது எல்லாம் போட்டிக்கு முன்பு தான் பேச வேண்டும். இடையில் சொல்லக் கூடாது என கடிந்து கொள்ள, வனிதா ஒன்றும் பேச முடியாமல் தவித்தார். பின்னர் நீ இங்கிருந்து கிளம்பு என தர்சனை அந்த இடத்திலிருந்து துரத்துவதில் குறியாக இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் வனிதாவிற்கு பதிலடி கொடுத்த தர்சனை யாரும் கவனிக்காத நேரத்தில் மீரா மிதுன் சோபாவில் அமர்ந்திருந்த படி அவரது கையை பிடித்து சூப்பர், செம என்பது போல செய்கை மூலம் வனிதாவை கிண்டலடித்துள்ளார்.