ஒரு எம்பியை இழக்கப்போகும் திமுக.?

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா மேச்சேரி யூனியன் பெரிய சாத்தாம்பாடி கிராமத்தில் உள்ள கரடு பகுதியான வருவாய் துறைக்கு உட்பட்ட அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் மர கன்றுகள் நடுவதற்கு கடந்த 1961 ஆம் ஆண்டு வனத்துறைக்கு வழங்கப்பட்டது.

இப்பகுதியில் மரங்கள் செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் வனவர் வடிவேலுவுடன் கூட்டுத்தணிக்கை மேற்கொண்டபோது வேடன் கரட்டின் அடிவாரத்தில் இரும்பு கம்பி ஆன செக்போஸ்ட் அமைக்கப்பட்டு ஒரு செல்போன் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதில் தொடர்பு கொண்டு நீங்கள் யார் என்று கேட்ட போது எனது பெயர் பழனிசாமி சேலம் திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபனின் வேலையாள் என்று கூறினார். அந்த இடம் எம்பிக்கு சொந்தமானது, யாரையும் அனுமதிக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் திமுக எம்பி எஸ்.ஆர். பார்த்திபன் மீது அப்பகுதி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வனச்சரகர் திருமுருகன் அளித்த புகாரின் பேரில் எம்.பி. பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர்கள் என 4 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து எம் பி பார்த்திபன் கூறுகையில் என் மீது அவப்பெயரை ஏற்படுத்தவே பதிவு செய்துள்ளனர் என்று கூறினார்.