இந்திய அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது அதிரடி கருத்து..

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக நடைபெற்று வருவது. இந்த தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியது.

நேற்று மற்றும் நேற்று முன் தினம் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளில் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கூறப்பட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்தார்.

நியூசிலாந்து அணிக்கு சமமாக 11 புள்ளிகள் பெற்ற போது ரன்ரேட் இல்லாததால் பாகிஸ்தான் அணி உலக கோப்பை இறுதி சுற்றிற்கு செல்ல முடியவில்லை. மேலும் இந்த உலகக் கோப்பை தொடரை இந்திய அணி,இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கும். பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததாக பாகிஸ்தான் அணியின் ஒரு சில முன்னணி வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த சர்பிராஸ், இல்லை.. இல்லை, அப்படி சொல்லல சொல்வது சரியாக இருக்காது. நாங்கள் வரக்கூடாது என்பதற்காக இந்தியா தோற்று இருக்காது என்று நான் நினைக்கிறேன். அன்றைய போட்டில் ஜெயிக்க வேண்டும் என இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது. அதனாலேயே இந்தியா தோல்வியடைந்தது என்று அதிரடியாக கூறினார்.